Wednesday, April 4, 2012

'3' - தனுஷின் ரத்த சரித்திரம்

ஒரு ஆறு மாசமா படத்தோட தலைப்புக்கு என்ன அர்த்தம்னு தெரியாம முழிச்சிட்டு இருந்த ரசிகர்களுக்கு ரெண்டரை மணி நேரம் மூச்சு திணற திணற சுத்தி சுத்தி அடிச்சிட்டு   '' கேளாய் மானிடா .. 3  என்பது 3 அடிமுட்டாள்கள் என்பதன் சுருக்கமே . ..இயக்குனரும் , நடிகரும் முதல்  இரண்டு பேர். மூன்றாவது நபர் நீதான் எங்கள்  செல்லமே... 'ன்னு புரியாம புரிய வெச்சிருக்காங்க..

இத அனுபவபட்டுதான் புரியனும்னு இன்னும் நினைக்கிறவங்க ,வீட்டுல ஒருதடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு தியேட்டர்க்கு போகலாம்.மத்தவங்க போஸ்டர் பக்கம் கூட போய்டாதீங்க.. டிவில இந்த படத்தை போடும்போது  , தப்பித்தவறி உங்க வீட்டுல கரண்ட் இருந்ததுனா , வெளிய ஓடிபோய் வெயில்லுல நின்னுக்கோங்க...


தனுஷ் மூணாவது தடவையா லூஸா நடிக்கிற படம். தலைப்பு இதுக்கும் பொருந்துது. 

ஸ்கூல் காலத்துல இருந்து வர காதல், ப்ரெண்ட்ஸ் கூட்டத்தோட நாலு காமெடி, அப்பா செண்டிமெண்ட்,ரெண்ட வீட்டுலயும் காதலுக்கு எதிர்ப்பு ,   பல பரிணாம வளர்ச்சிக்கு பிறகு கல்யாணம்.இப்படி தமிழ் திரைவரலாற்றிலயே இதுவரைக்கும் யாரும்  தொடாத கதையை கையில எடுத்து திரைக்கதை எழுதி அப்புறம் அதை படமா ரிலீஸ் செஞ்சிருக்காங்க.

படத்துல இவ்வளவு  இருந்தாலும் இது தனுஷ் படம் ஆச்சே...எதோ மிஸ் ஆவுதேன்னு நீங்க நெனச்சா எல்லாம் தெரிஞ்ச  இயக்குனருக்கு தெரியாதா என்ன? ஆடியன்ஸ் பல்ஸ கரெக்டா தெரிஞ்சிக்கிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் தனுஷ்க்கு மனநோய் தாக்குதுன்னு ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்காங்க.. அதுக்கு அப்புறம் கதை என்னவாகுதுங்கறதுதான் படம்.பாக்குற நாம என்னவாகறோம்ங்கறது நம்ம விதி.

பிரபு , பானுப்ரியா , ஸ்ருதிஹாசன் ,சிவகார்த்திகேயன்னு வரிசையா நல்ல ஸ்டார் வேல்யு உள்ள நடிகர்கள் இந்த படத்துல தேவை இல்லாம இருக்காங்க. அனிருத் , கொலைவெறி பாட்டு  தவிர இன்னும் ரெண்டு மெலடி நல்லபடியா கொடுத்திருக்காரு.இவர் ஓபனிங்  மட்டும்தான் இந்த படத்துல உருப்படியான விஷயம்.

ஐஸ்வர்யாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஒரு கமர்ஷியல் இயக்குனர் ஆக முதல் தகுதி அடுத்த படத்துல இருந்து கதையை சுடறதுதான். அது இவங்களுக்கு அழகா வருது. என்ன ஒன்னே ஒன்னு .. எல்லாமே தனுஷ் நடிச்ச பழைய படங்கள்ல இருந்தே உருவனதுனால நம்ம பசங்க கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க...

அவரோட முதல் படத்துல இருந்து கடைசியா வந்த படம் வரைக்கும் இருக்குற எல்லா சீனையும் எடுத்து 'இங்க்கி பிங்க்கி பாங்க்கி' போட்டு எது வருதோ அத எடுத்து இதுல மறுபடியும் யூஸ் பண்ணிருக்காங்க. நல்ல வருவீங்க மேடம். உங்கள மாதிரி திறமையான இயக்குனர்கள் சினி பீல்டுக்கு தேவை.

அம்மா..நாங்கெல்லாம் பேரரசு படத்தை கூட விசிலடிச்சு பார்ப்போம். மரண மொக்கை படமா இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே கமென்ட் அடிச்சிட்டு பாப்கார்ன மென்னுட்டு படத்தை ஜீரணம் பண்ணிக்குவோம். சத்தியமா இந்த மாதிரி கைக்குழந்தை கணக்கா தேம்பி தேம்பி  அழுது  பாத்தா படம் இதுதான். 

பவர் ஸ்டார் உட்பட மத்தவங்க யாருமே எங்கள அழ வெச்சி பாக்க விருப்பபட்டதில்ல.. நீங்க மட்டும் ஏன்? உங்களுக்கு செல்வராகவன் படங்கள்தான் இயக்குனர் ஆக இம்ப்ரெஸ் பண்ணுச்சுதுனா அதுக்காக இப்படியா?  செல்வராகவன் மாதிரி படம் எடுக்க செல்வராகவன் இருக்காரே.நீங்க எதுக்கு?

தனுஷ்  நீங்க ரொம்ப அடக்கமான மனிதர்.நல்ல நடிகர். தறுதலை,ரவுடி,வீட்டுக்கு அடங்காத பிள்ளை,லோக்கல் ஆளு,மெண்டல் கேரக்டர் எல்லாம் நல்லா பண்ணுவீங்க. அதுக்காக கேப் விடாம மெண்டலாவே நடிச்சிட்டு இருந்தா உண்மைலயே  அப்படி ஆகிடற அபாயம்  உங்களுக்கு இருக்கோ இல்லையோ ,பாக்கற   எங்களுக்கு இருக்கு.

ஒரு நாலஞ்சு வருஷம் உங்க வீட்டு ஆளுககிட்ட இருந்து விலகி நல்ல இயக்குனர்களோட சேர்ந்து நடிச்சா ,பேர காப்பாத்திக்க சான்ஸ் இருக்கு.என்ன பண்றது? சிம்பு தொல்லைல இருந்து தப்பிக்க எங்களுக்கு நீங்கதான கதி.

இது எல்லாத்தையும் மீறி இந்த படம் முதல் மூணு நாளுல ஒன்னே கால் கோடி வசூல் அள்ளி ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்கறது என்னைய  மாதிரி சாதாரண ரசிகனுக்கு வெளங்கல. ஒரு வேளை நமக்குதான் கலை கண்ணோட்டம் அந்த அளவுக்கு இல்லையோ..?!!?

அத விட இந்த படத்தோட  தெலுங்கு பதிப்பு பத்து கோடிக்கு வியாபாரம் ஆயிருக்காம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு , மக்கள் கூட்டம் சாரிசாரியா படத்துக்கு போகுதாம். ஹிந்திக்கு அடுத்த மாசம் படம் போகுதாம்.

நல்லது .. ரெம்ப நல்லது.. எவ்வளவு அள்ளணுமோ இந்த ஒரு தடவைலயே அள்ளிடுங்க எஜமான் அள்ளிடுங்க .. ஆனா தயவுசெஞ்சு இதே மாதிரி '4 ' , '5 'ன்னு எடுத்துராதீங்க..அந்த விபத்தை சந்திக்க எங்ககிட்ட    
தைரியம் இல்ல...

மூணு - முடியல..

14 comments:

Valaakam said...

he he kalakal review :D

உலக சினிமா ரசிகன் said...

பதிவுலகத்தில மூணு படத்தை இப்படி போட்டு காச்சுறாங்களே!
அப்படி என்னதான் ரம்பம் போட்டிருக்காங்கனு...கட்டாயம் மூணு படத்த பாக்கணும்னு நெனெச்சேன்.
ஆனா உங்க பதிவை படிச்சதும் மரண பயமே வந்திருச்சு...எச்சரித்தமைக்கு நன்றி.

அபிமன்யு said...

என்ன செய்றது நண்பா.?. படம் அந்த லட்சணத்தில் இருக்கு..

கோவை நேரம் said...

சரிதான்...பொருத்தமான தலைப்பு தான் வைத்து இருக்கிறீர்..ரத்த சரித்திரம் போல ..இதுவும்

ilan said...

first time i ran from theatre before movie ends 15 mins remainning

N.H. Narasimma Prasad said...

முதல் பாதி நல்ல இருக்கு, ரெண்டாவது பாதி மொக்கைன்னு எனக்கு சில பேர் சொன்னாங்க. நீங்க மொத்த படமே மரண மொக்கைன்னு சொல்றீங்க? இதுல இது உண்மை?

Jayadev Das said...

மூணு மாதிரி ஒரு மொக்கைப் படைத்தாலும் ஒரு பிரயோஜனம் இருக்கத்தான் செய்கிறது. அது, தங்களை இந்த மாதிரி ஒரு விமர்சனம் எழுத வைத்து எங்களை குஷிப் படுத்தியதுதான்!! ஹா..ஹா..ஹா... நான் படித்த 3 படத்தின் விமர்சனங்களிலேயே இது தான் டாப். மூணு படம் முழுசுமே மொக்கை என்றாலும் உங்கள் பதிவு முழுசுமே சூப்பர்.

Jayadev Das said...

\\'' கேளாய் மானிடா .. 3 என்பது 3 அடிமுட்டாள்கள் என்பதன் சுருக்கமே . ..இயக்குனரும் , நடிகரும் முதல் இரண்டு பேர். மூன்றாவது நபர் நீதான் எங்கள் செல்லமே... 'ன்னு புரியாம புரிய வெச்சிருக்காங்க.....தனுஷ் மூணாவது தடவையா லூஸா நடிக்கிற படம். தலைப்பு இதுக்கும் பொருந்துது. \\ படத்தோட தலைப்புக்கும் படத்துக்கும் சம்பதம் இருப்பதைக் கண்டு பிடித்ததற்கு சபாஷ்..... :)

Unknown said...

//செல்வராகவன் மாதிரி படம் எடுக்க செல்வராகவன் இருக்காரே.நீங்க எதுக்கு?//விடாம மெண்டலாவே நடிச்சிட்டு இருந்தா உண்மைலயே அப்படி ஆகிடற அபாயம் உங்களுக்கு இருக்கோ இல்லையோ ,பாக்கற எங்களுக்கு இருக்கு.//தனுஷ் மூணாவது தடவையா லூஸா நடிக்கிற படம். தலைப்பு இதுக்கும் பொருந்துது. //

அருமை! இதனால் தான் Zoom TV scroll-ல் தனுஷ்-ஸ்ருதி கிசுகிசு பார்த்தேன். ஏன்னென்று யோசித்தேன். இப்போது தான் புரிகின்றது. 3 இந்திக்குப் போகின்றது என்று...

Jayadev Das said...

\\இது எல்லாத்தையும் மீறி இந்த படம் முதல் மூணு நாளுல ஒன்னே கால் கோடி வசூல் அள்ளி ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்கறது என்னைய மாதிரி சாதாரண ரசிகனுக்கு வெளங்கல. ஒரு வேளை நமக்குதான் கலை கண்ணோட்டம் அந்த அளவுக்கு இல்லையோ..?!!?\\ கொலைவெறி பட்டு பிரபலமானது ஒரு காரணமாக இருக்கலாம். [ஆந்திராவின் உரிமை நல்ல விலைக்கு விற்கப் பட்டதற்கும் இதே காரணம்தான்.] செல்வராகவன் படங்களைஎல்லாம் ரசிக்கும் அளவுக்கு ரசிகர்களின் ரசனை வீழ்ந்து போனதும் நிஜம் தான்.

அபிமன்யு said...

நன்றி ஜெயதேவ்,சுந்தர்.

ஹிந்தியில் ஹிட் அடித்தால் இவர்களை கையில் பிடிக்க முடியாது..

Sambath said...

சிறப்பான விமர்சனம் ...வழக்கமான  தெளிவு 

படம்   சொதப்பி  இருக்கலாம் ஆனால் உன் விமர்சனம் மெருகேறிக்கொண்டே இருக்கிறது 
அற்புதம் அசோக் 

Anonymous said...

This is stupid reveiw ... It is not even a review .. You are just criticizing the film.
Please justify your review with altleast 5 reason.

/Prabakar.

beaviscartmanstewie said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment